தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினரால் நடாத்தப்படும் பசுமை அமைதி விருதுகள்-2024 இணையவழி சூழல் பொது அறிவுப் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) இரவு-07 மணி தொடக்கம் இரவு-08.30 மணி வரை நடைபெறவுள்ளது.
நூறு பல்தேர்வு வினாக்களைக் கொண்டதாகக் குறித்த பரீட்சை இடம்பெறும். பரீட்சைக்கு விண்ணப்பித்த அனைவரும் பரீட்சை ஆரம்பமாவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் Www.tamilnational green.org எனும் இணையத்தளத்தின் ஊடாகப் பரீட்சைக்கான அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.