சுன்னாகம் சிவன் சிறுவர் கழகத்தின் சிறுவர் தின நிகழ்வும் மூத்தோர் கெளரவமும் நாளை திங்கட்கிழமை (28.10.2024) பிற்பகல்-02.45 மணியளவில் சுன்னாகம் கதிரமலைச் சிவன் ஆலய மணிமண்டபத்தில் சிவன் சிறுவர் கழகத் தலைவர் மாதுளா மதியழகன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் யாழ்.ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அதிபர் மு. செல்வஸ்தான், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாண அலுவலக உத்தியோகத்தர் ராஜன், சுன்னாகம் Arpico insurance நிறுவனப் பிராந்திய முகாமையாளர் ம.சசிதரன், தமிழருவி மின் நாளிதழின் பொதுமக்கள் தொடர்பாடல் மற்றும் கலாசார உத்தியோகத்தர் ச.சாரிசா, நன்கொடையாளர் சார்பில் அனுசியா கந்தசாமி ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
நிகழ்வில் கலங்கரை இதழ்-05 வெளியீடும் இடம்பெறும். குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்