வடக்கிற்கான புகையிரத சேவையை நாளை திங்கட்கிழமை (28.10.2024) முதல் வழமை போன்று முன்னெடுப்பதற்குப் புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கொழும்புக் கோட்டையிலிருந்து நாளை அதிகாலை-05 மணியளவில் யாழ்.தேவி புகையிரதம் புறப்பட்டுக் காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது.
வடக்கு மார்க்கத்தின் புகையிரத சேவைகள் நாளை மீள ஆரம்பிக்கப்பட்டாலும் சமிக்ஞைகள் தொடர்பான சிக்கல்நிலை தொடர்வதாகப் புகையிரத சாரதிகள் சங்கத்தின் தலைவர் சந்தன தெரிவித்துள்ளார். இதன்காரணமாக வடக்குப் புகையிரத மார்க்கத்தின் கடவைகளைப் பயன்படுத்துவோர் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.