கந்தரோடையில் இன்று கலந்துரையாடல்

வலிகாமம் தெற்குப் பிரதேச சபை 2025 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டம் தொடர்பான முன்மொழிவுகளைத் தெரிவு செய்தல் மற்றும் செயற்படுத்தல் தொடர்பில் பொதுமக்களின் பூரண பங்கேற்புடன் செயற்படுத்தவுள்ளது. 

இதற்கான கலந்துரையாடல்களின் ஒரு பகுதியாக வட்டாரம்-09 இற்கு உட்பட்ட ஜே-186, ஜே-200 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பகுதிகளில் அவசியம் செய்ய வேண்டியதான அபிவிருத்தித் திட்டங்களை இனம் கண்டு முன்னுரிமைப்படுத்தல் தொடர்பான கூட்டம் இன்று வியாழக்கிழமை (10.10.2024) பிற்பகல்-02.30 மணிக்கு கந்தரோடை சமூகநலன்புரி நிலையத்தில் இடம்பெறவுள்ளது. இக் கூட்டத்தில் மேற்படி கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த அனைத்துப் பொதுமக்களையும் தவறாது கலந்து கொண்டு தேவையான தகவல்களை வழங்கி அபிவிருத்தியில் பங்கேற்குமாறு வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் திருமதி.சாரதா உருத்திரசம்பவன் கேட்டுக் கொண்டுள்ளார்.