இந்தியப் பேராசிரியர் பஞ்சாங்கத்துடன் இலக்கியச் சந்திப்பு

இலக்கியவெளி  சஞ்சிகை குழுமம் நடாத்தும் இந்தியப் பேராசிரியர் க.பஞ்சாங்கத்துடன் ஓர் இலக்கியச் சந்திப்பு நிகழ்வு இன்று புதன்கிழமை (09.10.2024) மாலை-03.30 மணியளவில் டேவிட் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் "இன்றைய இலக்கியத் திறனாய்வு எதிர்கொள்ளும் சிக்கல்கள்" எனும் கருப் பொருளில் பேராசிரியர் பஞ்சாங்கம் உரையாற்றவுள்ளதுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.