யாழ்.பல்கலைக்கழகத்தில் புத்தகக் கண்காட்சி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றுத் திங்கட்கிழமையும் (07.10.2024), இன்று செவ்வாய்க்கிழமையும் (08.10.2024) ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு சிறப்பாக இடம்பெற்றது. இதன் ஒருகட்டமாக எங்கட புத்தகங்கள் அமைப்பு, ஜீவநதி பதிப்பகம், மொழி பதிப்பகம் ஆகியவற்றின் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது.       

ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள் மற்றும் ஈழத்துச் சஞ்சிகைகள் குறித்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்த நிலையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் இக் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். புத்தகக் கண்காட்சியில் அனைத்துப் புத்தகங்களுக்கும் இருபது வீத விசேட விலைக்கழிவு வழங்கப்பட்டமையால் இரு தினங்களும் புத்தகங்களின் விற்பனையும் சூடுபிடித்திருந்தது.