இன்று திங்கட்கிழமை (08.10.2024) நள்ளிரவுடன் நிறையடையவிருந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் செயற்பாடுகளில் காணப்பட்ட தாமதம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய நாளை மறுதினம்-10 ஆம் திகதி நள்ளிரவு-12 மணி வரை விண்ணப்பங்களை ஏற்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.