யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத் துறை நடாத்தும் பேராசிரியர். சு. சுசீந்திரராஜா நினைவுப் பேருரை நிகழ்வு நாளை புதன்கிழமை ( 09.10.2024) காலை-09.30 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் "கணினி மொழியியலின் இன்றைய வளர்ச்சியும் தமிழும்" எனும் தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், மிகச் சிறந்த மொழியியலறிஞருமான ந.தெய்வசுந்தரம் கலந்து கொண்டு நினைவுப் பேருரை நிகழ்த்துவார்.