யாழ்.பல்கலைக்கழகத்தில் நாளை முப்பெரும் விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டின் இரண்டாம்நாள் நிகழ்வுகள் நாளை செவ்வாய்க்கிழமை (08.10.2024) காலை-09 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் முப்பெரும் விழாவாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.  

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். கிருஷ்ணபிள்ளை விசாகரூபன் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் கவிதா நிகழ்வு, நடன அரங்கு, தமிழிசை அரங்கு, கூத்து அரங்கு என்பன இடம்பெறவுள்ளன.