இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் 11 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வாலிபத் தீபாவளிக் கொண்டாட்டமும் தீபாவளித் திருநாளான நாளை வியாழக்கிழமை (31.10.2024) மாலை-05 மணி முதல் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர் நா.சுகந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், மன்னார் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.ஆதவன், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் செயலாளர் சு.சுதர்ஜன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதி முகாமைத்துவச் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.ஜெயன் சுகன்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் கலை- கலாசார நிகழ்வுகள், நடன நிகழ்வுகள், பிரபல மாயாஜால வித்தகரின் மாயாஜால வித்தைகளின் காட்சி, இலங்கையின் பல பாகங்களிலிருந்து இணையும் முன்னணிக் கலைஞர்களின் கலக்கலான இசை நிகழ்ச்சி, வான வேடிக்கைகள் மற்றும் கலைநிகழ்வுகள் நடைபெறும்.
குறித்த நிகழ்வுகளுக்கான அனுமதி முற்றிலும் இலவசமென நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அனைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.