தற்காலிகமாகக் கைவிடப்பட்ட ரயில் நிலைய அதிபர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!

ரயில்நிலைய அதிபர்களின் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்புத் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சில பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து நேற்றுப் புதன்கிழமை (30.11.2024) மாலை முதல் இரவு-10 மணி வரை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

தமது கோரிக்கைக்கு இன்றைய தினத்திற்குள் உரியதீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை வெள்ளிக்கிழமை (01.10.2024) மீண்டும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.