குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாளின் கேதாரகெளரி விரத நிறைவு வழிபாடு

                    

குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாளின் கேதாரகெளரி விரத நிறைவு வழிபாடு நாளை வியாழக்கிழமை (01.11.2024) காலை-09 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது. 

அம்பாளுக்கு அபிஷேக, பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலயப்  பிரதமகுருவால்  அடியவர்களுக்குக் கெளரிக் காப்புக் கட்டும் வைபவம் நடைபெறும். 

இதேவேளை, பாலஸ்தாபனம் செய்யப்பட்டிருப்பதால் இம்முறை அம்பாளின் வீதி உலா இடம்பெற மாட்டாது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.