யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர்.பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் நாடகமும் அரங்கக் கலைகளும் துறையின் ஏற்பாட்டில் ஈழத்து அரங்க ஆளுமை ஏ.சீ .தாசீசியஸ் குறித்தான ஈழக் கூத்தன் ஏ.சீ .தாசீசியஸ் எனும் ஆவணப்படத் திரையிடல் நிகழ்வு நாளை திங்கட்கிழமை (21.10.2024) மாலை-04 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் நாடக ஆர்வலர்களையும், திரை ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.