நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு நேற்றுச் சனிக்கிழமை (19.10.2024) மாலை- 03 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த செயலமர்வில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கலந்து கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கினார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு ஆராயப்பட்டன.
குறித்த செயலமர்வில் சிரேஷ்ட வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரி.சி.ஏ.தனபால, பிரதிப் பொலிஸ்மா அதிபர் றுவான் குணசேகர, கிளிநொச்சி மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சமந்த டி.சில்வா, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.சிறிமோகனன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எல். ஏ. சூர்யபண்டார, பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.சந்தன ஹமகே, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், முறைப்பாட்டு முகாமைத்துவப் பிரிவின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.