இந்துசமயப் பேரவையின் ஏற்பாட்டில் சிவபூஜா மாநாடும் இந்துசமயப் பேரவையின் தலைவர் ஈசான சிவசக்திகிரீவன் யாத்த சிவபூஜாத் திறவுகோல் எனும் நூல் வெளியீடும் கடந்த செவ்வாய்க்கிழமை (15.10.2024) மாலை-04.30 மணி முதல் யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள இந்துசமயப் பேரவையின் நடராஜர் மண்டபத்தில் மூத்த எழுத்தாளர் கோப்பாய் சிவம் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் ஈழத்துக் கலைத்துறை வரலாற்றில் சாதித்து வரும் நாதஸ்வர மேதை ஈழநல்லூர் பி.எஸ்.பாலமுருகனுக்கு இந்துசமயப் பேரவையின் தலைவர் ஈசான சிவ சக்திகிரீவன் சுரஞானச் சக்கரவர்த்தி விருதும், தவில் மேதை தெட்சணாமூர்த்தி உதயசங்கருக்கு லயஞானச் சக்கரவர்த்தி விருதும் வழங்கிக் கெளரவித்தார். அத்துடன் இருவரும் இந்துசமயப் பேரவை சார்பாகச் சிறப்பாகத் தங்கப் பதக்கம் அணிவித்தும் கெளரவிக்கப்பட்டனர்.