யாழ்ப்பாணத்தில் உயிர்கள் காக்கும் பணி முன்னெடுப்பு

யாழ்ப்பாணம்  போதனா வைத்தியசாலை இரத்தவங்கியில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு விதையனைத்தும் விருட்சமே குழுமம் மற்றும் குறிஞ்சி கிறியேஷன்ஸ் இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை (19.10.2024) காலை-08.45 மணி முதல் மாலை-03.30 மணி வரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்தவங்கிப் பிரிவில் இடம்பெற்றது.  

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் விதையனைத்தும் விருட்சமே குழுமம், குறிஞ்சி கிரியேஷன்ஸ்  நிறுவன உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வக்  குருதிக் கொடையாளர்கள் என  28 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கி உயிர்கள் காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.