வட்டுக்கோட்டையில் மாதாந்த திருவாசக முற்றோதல்

 

வட்டுக்கோட்டை சிவபூமி தேவாரமடத்தினர் நடாத்தும் மாதாந்தத் திருவாசக முற்றோதல் நிகழ்வு நாளை வியாழக்கிழமை (24.10.2024) காலை-07 மணி தொடக்கம் நண்பகல்-12 மணி வரை தெல்லிப்பழை பிரதான வீதி, வட்டுக்கோட்டை சங்கரத்தையில் அமைந்துள்ள மேற்படி தேவாரமட மண்டபத்தில்  சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ளது. 

திருவாசக முற்றோதலைத் தொடர்ந்து அன்னதானமும் இடம்பெறும். நிகழ்வில் அனைத்து அடியவர்களையும் கலந்து கொள்ளுமாறு வட்டுக்கோட்டை தேவாரமடப் பொறுப்பாளர் கேட்டுள்ளார்.