கொக்குவிலில் கையெழுத்துப் பிரதிகள் மற்றும் நூல்களின் கண்காட்சி

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டுக் கொக்குவில் பொதுநூலகம் நடாத்தும் கையெழுத்துப் பிரதிகள் மற்றும் நூல்களின் கண்காட்சி நாளை  வியாழக்கிழமையும் (24.10.2024), நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் (25.10.2024) காலை-09 மணி முதல் மாலை-04 மணி வரை கொக்குவில் பொதுநூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் இலக்கிய நூல்கள் மற்றும் சஞ்சிகைகளின் விற்பனையும் இடம்பெறும். நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.