சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஞானச்சுடர் சஞ்சிகையின் ஐப்பசிமாத வெளியீட்டு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (25.10.2024) முற்பகல்-10.30 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
சந்நிதியாதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் சமாதான நீதவான் ஐ.கோ. சந்திரசேகரம் சஞ்சிகையின் வெளியீட்டுரையையும், சைவப்புலவர் கந்த சத்தியதாசன் மதிப்பீட்டுரையையும் நிகழ்த்துவர் .