தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் தீபாவளி விசேட அபிஷேகம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் தீபாவளித் திருநாளான நாளை வியாழக்கிழமை (31.10.2024) விசேட அபிஷேகம், பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

நாளை காலை-07 மணிக்குத் துர்க்கை அம்பாளுக்குச் விசேட அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து காலை-08 மணிக்குப் பூசை வழிபாடுகளும் நடைபெறுமென மேற்படி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.