சுன்னாகம் பொதுநூலகம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த பிரதேச ஓவியரும், சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பிரதி அதிபருமான சி.சந்திரசுபநேமியின் கைவண்ணத்தில் உருவான ஓவியக் கண்காட்சி நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (25.10.2024) முற்பகல்-10.30 மணிக்குச் சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் ஆரம்பமாகி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) வரை இடம்பெற்றது.
இந்தக் கண்காட்சியில் இலங்கையின் மிக உயரமானதென வர்ணிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் சித்திரத் தேரின் அழகிய தோற்றமும் சிறிலங்கா அரசபடைகளால் அந்தச் சித்திரத் தேர் தீயிட்டு அழிக்கப்பட்ட பின்னர் எஞ்சிய நிலையில் காணப்பட்ட சிதிலங்களும் ஓவியரால் மிகவும் தத்ரூபமான முறையில் ஓவியமாக வரையப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவை கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைவரதும் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது