தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் செஞ்சொற்செல்வருடன் சந்திப்பு

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (29.10.2024) மாலை-04.30 மணியளவில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுகனைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வளாகத்தில் அமைந்துள்ள நிர்வாக அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.