பன்றிகளிடையே பரவிவரும் ஆபிரிக்க வைரஸ் தொற்றுக் காரணமாக நாடளாவிய ரீதியில் அபாய நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பன்றிகளை நோய் அபாயம் கொண்ட விலங்குகளாகப் பிரகடனப்படுத்துவதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவலயின் கையொப்பத்துடன் இன்று (29) அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பன்றி இறைச்சியை விற்பனை செய்தல், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் மற்றும் பன்றி இறைச்சி உற்பத்திகளைத் தயாரித்தல் ஆகிய செயற்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த தீர்மானம் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அமுலிலிருக்குமெனவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.