நவமகாஜனச் சிற்பி ஜயரத்தினம் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும்

நவமகாஜனச் சிற்பி தெ.து.ஜயரத்தினம் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும் நாளை செவ்வாய்க்கிழமை (29.10.2024) காலை-08.30 மணி முதல் யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கல்லூரி அதிபர் இ.புஸ்பரட்ணம் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடக் கணிதமும் புள்ளி விபரவியலும் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.லகீதரன், யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஆசிரியர் திருமதி.சோபனா லகீதரன் ஆகியோர் பிரதம விருந்தினராகவும், தெல்லிப்பழைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் வே.அரசகேசரி சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.