நல்லூர் பிரதேச சபை நூலகங்களின் தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா-2024 நாளை ஞாயிற்றுக்கிழமை (20.10.2024) காலை-09 மணி முதல் நல்லூர் பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் யு. ஜெலீபன் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உளநல மருத்துவ நிபுணர் சி.சிவதாஸ் பிரதம விருந்தினராகவும், யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபர் பெ.வசந்தன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து .கொள்ளவுள்ளனர். இதன்போது பல்வேறு கலைநிகழ்வுகளும், பரிசில் வழங்கலும் இடம்பெறும்.
இதேவேளை, மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.