தேசியமட்டத் தடகளப் போட்டி: மகாஜனக் கல்லூரிக்குத் தங்கப் பதக்கம்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டி- 2024 கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (18.10.2024) ஆரம்பமானது. எதிர்வரும்- 22 ஆம் திகதி வரை இப் போட்டிகள் நடைபெறும்.

நேற்றையதினம் இடம்பெற்ற 20 வயது ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ்.மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த ச.உசாந்தன் 4.30 மீற்றர் உயரம் தாண்டித் தங்கப் பதக்கம் பெற்றுச் சாதித்துள்ளார்.