முன்னரே குறிப்பிட்டபடி இன்று மத்திய வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது எதிர்வரும்-07 ஆம் திகதி வியாழக்கிழமை தாழமுக்கமாக மாற்றம் பெறும் வாய்ப்புள்ளது. இதன்காரணமாக எதிர்வரும்- 07 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மாதிரிகளின் தற்போதைய நிலையின் படி இத் தாழமுக்கம் மேற்காக நகர்ந்து எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் வடக்கு மாகாணத்திற்கு அண்மித்து வருமென எதிர்பார்க்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.