தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் சிறப்பிக்கப்பட்ட கேதார கெளரி விரதப் பூர்த்தி


வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின்  வருடாந்தக்  கேதார கெளரி விரதப் பூசையின் பூர்த்தி வழிபாடு கடந்த வெள்ளிக்கிழமை (01.11.2024) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

முற்பகல்-11 மணியளவில் பூசை வழிபாடுகள் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து முற்பகல்-11.30 மணியளவில் கேதாரகெளரி விரதச் சிறப்புப்  பூசை வழிபாடுகளும், வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளும் நடைபெற்றது. பிற்பகல்- 01 மணியளவில் அடியவர்களுக்குக் கேதாரகெளரி விரதக் காப்பு வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெற்றது. அடியவர்கள் நீண்ட வரிசையில் நின்று கேதாரகெளரி விரதக் காப்பினைப் பெற்றுச் சென்றனர்.              

இதேவேளை, இவ் ஆலயத்தில் இந்த வருடம் 2700 வரையான அடியவர்கள் கேதாரகெளரி விரதமிருந்து கெளரிக் காப்பினைப் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.