யாழ்.ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபர் மு.செல்வஸ்தானின் மணி விழா நாளை புதன்கிழமை (06.11.2024) காலை-08.30 மணி முதல் சுன்னாகத்தில் அமைந்துள்ள கல்லூரியின் ஒறேற்றர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கல்லூரியின் கல்விசார், கல்விசாரா ஊழியர் நலன்புரிக் கழகத் தலைவர் தி.வேந்தகுமார் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த விழா நிகழ்வில் மலர் வெளியீடும், விழா நாயகன் கெளரவிப்பும் இடம்பெறும்.
மேற்படி விழாவில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.