அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் வேட்பாளர்கள் பங்குபற்றும் மாபெரும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (05.11.2024) மாலை- 05.30 மணியளவில் உரும்பிராய் மூன்று கோவிலடி அம்மன் கோவில் முன்பாக அமைந்துள்ள உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.