கோண்டாவிலில் மாணவர் மாதிரிச் சந்தை

யாழ்.கோண்டாவில் றோ.க.த.க பாடசாலை மாணவர்களின் மாதிரிச் சந்தை நிகழ்வு இன்று புதன்கிழமை (06.11.2024) காலை-08.30 மணி தொடக்கம்  முற்பகல்-11 மணி வரை பாடசாலை முன்பாக பாடசாலைச் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

பாடசாலையின் அதிபர் க.நித்தியானந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் கோண்டாவில் வடகிழக்குப் பகுதியின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பற்றீசியா சுகந்தன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்வார்.

நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு மாணவர்களின் சந்தை நிகழ்வில் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்து மாணவர்களை ஊக்குவிக்குமாறு மேற்படி பாடசாலைச் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.