சுன்னாகத்தில் நூலகதின விழாவும் இராம ஒளி சஞ்சிகை வெளியீடும்

யாழ்.இராமநாதன் கல்லூரியின் நூலகதின விழாவும், இராம ஒளி இதழ்-09 சஞ்சிகை வெளியீடும்-2024 நிகழ்வு இன்று புதன்கிழமை (06.11.2024) முற்பகல்- 11.30 மணி முதல் சுன்னாகத்தில் அமைந்துள்ள கல்லூரியின் அருணாசலம் மண்டபத்தில் கல்லூரியின் அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. 

கல்லூரியின் அதிபர் திருமதி.அம்பிகை சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் வலிகாமம் வலய சங்கீதபாட ஆசிரிய ஆலோசகர் மாணிக்கம் தேவகாந்தன் பிரதம விருந்தினராகவும், கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் திருமதி. கமலராணி கிருஷ்ணபிள்ளை சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்வர்.

நிகழ்வில் வலிகாமம் வலயத் தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர் பார்வதிநாதசிவம் மகாலிங்கசிவம் கலந்து கொண்டு நூல் நயப்புரை நிகழ்த்துவார்.