பொதுநிர்வாக சேவை உள்ளிட்ட பல அரச நிர்வாக சேவைகளில் 1200 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவுவதாகப் பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுத் தெரிவித்துள்ளது .
பொதுநிர்வாக சேவை மற்றும் கணக்காய்வுச் சேவைகளிலேயே அதிக வெற்றிடங்கள் நிலவுகின்றன. குறித்த சேவைகளுக்கான ஆட்சேர்ப்புப் பரீட்சைகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன் பெறுபேறுகளின் அடிப்படையில் உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். பொறியியல் துறையிலும் 250 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுகின்றன. குறித்த அனைத்து வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பைத் துரிதகதியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.