சிங்களத் தேசியத்துடன் தமிழ்த்தேசியத்தைக் கரைப்பதற்காகப் பலரும் முயன்று கொண்டிருக்கின்றனர். இந்தத் தருணத்தில் தமிழ்த்தேசியத்தைக் காப்பதற்காகவும், மீட்பதற்காகவும் தமிழர் சம உரிமை இயக்கமாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகின்றோம்.எனத் தமிழர் சம உரிமை இயக்கத்தின் நாடாளுமன்ற வேட்பாளர் நல்லதம்பி பொன்ராசா குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழர்சம உரிமை இயக்கத்தின் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.11.2024) மாவை கலட்டிப் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்த்தேசியத்தைப் பொறுத்தவரையிலும், வட- கிழக்குத் தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரையிலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல். இந்தத் தேர்தலைத் தமிழ்மக்கள் சரிவரப் பயன்படுத்தி எமது பசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.