16 லட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

                        


இந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் நாட்டிற்குப் பிரவேசித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதற்கமைய, குறித்த காலப் பகுதிக்குள் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1601, 949 ஆகும் எனச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

கடந்த மாதத்தில் நிறைவடைந்த 27 நாட்களில் மாத்திரம் 117, 141 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.