தமிழர் சம உரிமை இயக்கத்தின் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (03.11.2024) முற்பகல்-10 மணிக்கு யாழ்.கீரிமலையிலும், வன்னியின் ஒட்டுசுட்டானிலும் சமநேரத்தில் நடைபெறும்.
கீரிமலையில் காங்கேசன்துறைத் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் பல்கலைக்கழக மாணவி டிபினியா ஜெகதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழர் சம இயக்கத்தின் முதன்மை வேட்பாளர் கலாநிதி தே.தேவானந்த் வெளியிட்டு வைக்கவுள்ளார்.
வன்னியில் நாடாளுமன்ற முதன்மை வேட்பாளர் க.கருணானந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் முல்லைத்தீவு நாடாளுமன்ற வேட்பாளர் தமிழ்த்தேசியப் போராளி த.யோகானந்தன் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்கவுள்ளார்.