பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (03.11.2024) நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க 2090 தபால் அலுவலகங்கள் இன்றைய தினம் திறக்கப்பட்டிருக்குமென சிரேஷ்ட பிரதித் தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை-08 மணி முதல் மாலை-06 மணி வரை வீடுகளுக்கே வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. எதிர்வரும்-07 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.