டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதான ஆலோசகர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி. ஹான்ஸ் விஜயசூரியவை நியமித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித் தன்மை மற்றும் அனைத்துப் பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எதிர்பார்ப்புடன் பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தமது தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.