மாவிட்டபுரம் கந்தப் பெருமானின் கந்தசஷ்டி விரத உற்சவம்

  

வரலாற்றுச் சிறப்பு மிக்க  மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் குரோதி வருடக் கந்தசஷ்டி விரத உற்சவம் நாளை சனிக்கிழமை (02.11.2024) ஆரம்பமாகி  எதிர்வரும்-08 ஆம் திகதி வரை காலை, மாலை உற்சவங்களாகச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.  

உற்சவகாலப் பகுதியில் தினமும் காலை-06 மணிக்கு உஷக்காலப்  பூசை, காலை-07 மணிக்கு108 சங்காபிஷேகம், காலை-08.30 மணிக்கு காலைச் சந்திப் பூசை தொடர்ந்து திருச்செந்தூர் புராணப் படிப்பு, முற்பகல் 1:00 மணிக்கு வசந்தமண்டப பூசை தொடர்ந்து திருவிழா, பிற்பகல்- 12:30 மணிக்கு உச்சிக்காலப் பூசை தொடர்ந்து திருவருட் பிரசாதம் வழங்குதல் இடம்பெறும்.

தினமும் மாலை-05 மணிக்கு 108 சங்காபிஷேகம், மாலை- 06:30 மணிக்கு சாயரட்சைப் பூசை, மாலை-07:20 மணிக்கு இரண்டாம் காலப் பூசை, இரவு- 07:30 மணிக்கு வசந்தமண்டபப் பூசை தொடர்ந்து திருவிழா, இரவு-09:30 மணிக்கு அர்த்தசாமப் பூசை தொடர்ந்து திருவருட் பிரசாதம் வழங்குதல் என்பன இடம்பெறும்.

எதிர்வரும்-04 ஆம் திகதி  திங்கட்கிழமை மாலை-07.45 மணிக்கு வேல்வாங்கும் உற்சவமும், 07 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை-03.30 மணிக்கு சூரசம்ஹாரத் திருவிழாவும், 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-07:30 மணிக்குத் தீர்த்தோற்சவமும், 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை-07.30 மணிக்குத் திருக்கல்யாண வைபவமும் இடம்பெறும்.  

இதேவேளை, கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் அடியார்கள் தங்கள் பெயர் விபரங்களை ஆலயக் காரியாலயத்தில் பதியலாம் எனவும்  மாவை ஆதீன கர்த்தா மகாராஜஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள் தெரிவித்துள்ளார்.