நாளை மறுதினம் வியாழக்கிழமை (14.11.2024) இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காகத் தங்களின் சொந்த இடங்களுக்குச் செல்பவர்களின் வசதிகளைக் கருத்திற் கொண்டு விசேட பேருந்துச் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்கமைய, இலங்கை போக்குவரத்துச் சபையினால் இன்று செவ்வாய்க்கிழமையும் (12), நாளை புதன்கிழமையும் (13) பேருந்துச் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.