காரைக்கவி கந்தையா பத்மானந்தன் எழுதிய தொலைந்துவிட்ட வாழ்வியல் நினைவுகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பான சீத்துவக்கேடு நூலின் அறிமுகவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை (10.11.2024) மாலை-04 மணி முதல் நல்லை ஆதீன மண்டபத்தில் காரை சுந்தரம்பிள்ளை எனும் பெயரில் அமைந்த அரங்கில் இடம்பெறவுள்ளது.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் வடக்கு ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் இ. இளங்கோவன் கெளரவ விருந்தினராகவும், ஜீவநதி சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் க.பரணீதரன், எங்கட புத்தகங்கள் குழும நிறுவுநர் கு.வசீகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.