நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக் கூட்டம் இன்று சனிக்கிழமை (09.11.2024) இரவு-07 மணி முதல் யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகாமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ், கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர் நடராஜர் காண்டீபன், கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகர் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த பொதுக் கூட்டத்தில் தமிழ்த்தேசியப் பற்றாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
குறித்த பொதுக் கூட்டத்தில் தமிழ்த்தேசியப் பற்றாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.