வெடுக்குநாறி மலை ஆலய விவகாரம்: இருவர் விசாரணைக்கு அழைப்பு!

பிரசித்திபெற்ற வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரம் தொடர்பில் இருவரைப் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இதற்கமைய,  வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை நாளை சனிக்கிழமை (09.11.2024)  வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.