இலங்கை சிவசேனை அமைப்புச் சார்பாக சுயேட்சைக்குழு-12 இல் ஆமைச் சின்னத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.11.2024) மாலை-05.45 மணி முதல் மயிலங்காடு ஸ்ரீமுருகன் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
மயிலங்காடு ஸ்ரீமுருகன் சனசமூக நிலையத்தின் பொருளாளர் கிருஷ்ணபிள்ளை ராஜசேகரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன், சிவசேனை அமைப்பின் அடியார் விபுலானந்தா மற்றும் நாடாளுமன்ற வேட்பாளர்களான பா. ஜயமாறன், து.ரவிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்வில் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.