யாழ்.இந்துக் கல்லூரியின் முதல் பெண் ஆசிரியர் மறைவு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முதலாவது பெண் ஆசிரியர் கலாபூஷணம்.செல்வி.செல்லத்துரை தங்கலட்சுமி இன்று வியாழக்கிழமை (07.11.2024) யாழில் காலமானார். 

ஆறு அதிபர்கள், நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், பல நூற்றுக்கணக்கான மாணவர்களைத் தன் 45 வருட கால ஆசிரிய சேவைக் காலத்தில் கண்ட புகழ்பூத்த சங்கீத ஆசிரியரான அம்மையார் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அடையாளம், தனித்துவ ஆளுமை என்றால் அது மிகையில்லை.அம்மையாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.... 

இதேவேளை, அம்மையாரின் இறுதிக் கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை (08.11.2024) நண்பகல்- 12 மணியளவில் பழம்வீதி யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அம்மையாரின் புகழுடல் கோம்பையன்மணல் இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.