தபால்மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக இன்று வியாழக்கிழமையும் (07.11.2024) நாளை வெள்ளிக்கிழமையும் (08.11.2024) விசேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம்-30 ஆம் திகதி, மற்றும் இந்த மாதம்- 01, 04 ஆம் திகதிகளில் தபால்மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்காக இந்த இரு தினங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.