யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரிச் சமூகத்தின் ஏற்பாட்டில் ஒளிவிழா நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (19.11.2024) முற்பகல்-11 மணி முதல் கல்லூரியின் சாண்டர்ஸ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கல்லூரியின் அதிபர் ரி.வரதன் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் வேலணை சாட்டித் திருத்தலப் பங்குத் தந்தை அருட்தந்தை. ஜெகன்குமார் கூஞ் பிரதம விருந்தினராகவும், தெல்லிப்பழை அமெரிக்கன் மிஷன் ஆலய அருட்பணி ரி.ஜி.அசோக்குமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.