இலங்கை வரலாற்றில் முதல்தடவையாக நாடாளுமன்றத்திற்கு விசேடதேவையுடையவர் சார்ந்த ஒரு பிரதிநிதி நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாகக் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சிறுவயதில் இடம்பெற்ற விபத்தினால் கண்பார்வையை இழந்த சுகத் வசந்த டி சில்வா கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். 25 வருடங்களாக சமூக சேவை உத்தியோகத்தராகப் பணியாற்றி வந்த இவர் இலங்கை விழிப்புலனற்றப் பட்டதாரிகள் பேரவையின் தலைவராகவும் உள்ளார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி தனது நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலேயே இந்த நியமனத்தை வழங்கி வைத்துள்ளது.