நல்லூரில் நாவலர்பெருமான் நினைவு வைபவம்

"ஐந்தாம் குரவர்" எனப் போற்றப்படுபவரும், சைவமும், தமிழும் காத்த தனிப்பெருந் தலைமகனுமான நல்லைநகர் நாவலர் பெருமானின் நினைவு வைபவம் நாளை சனிக்கிழமை ( 23.11.2024) முற்பகல்-10 மணி முதல் நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய நிர்வாகசபையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத் த1லைவரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் துர்க்காபுரம் மகளிர் இல்ல மாணவிகளின் திருமுறைப் பாராயணம், கூட்டுப் பிரார்த்தனை, பேச்சு என்பன நடைபெறும். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா " நாவலர் பெருமானின் வாழ்வும் வளமும்" எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துவார். அதனைத் தொடர்ந்து அடியவர்களுக்கு மகேஸ்வர பூசை  (அன்னதானம்) வழங்கப்படும். 

நாவலர் பெருமானின் நினைவு வைபவத்தில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.