தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளராக ஸ்ரீநேசன் நியமனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை (21.11.2024) நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்ற போதே குறித்த  நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையிடும் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.